Wednesday, September 29, 2010

பொறுமையின் பெருமை

அஸ்ஸலாமு அலைக்கும் வரகுமதுல்லாஹி வபரகாதுஹு  


அன்பர்களே.. இந்த கட்டுரையின் நோக்கம் உண்மையிலேயே நாவின் கட்டுப்பாட்டை எடுத்துக்கூறவே ஆகும். குறிப்பாக கூட்டங்கள் , கடைத்தெருக்கள் மட்டுமன்றி வீட்டிலும் கூட நமது நாவை விரும்பிய வாறெல்லாம் பயன்படுத்துவதால் இறுதியில் பல்வேறு மனச்ச்சஞ்சலங்களுக்கும், மனக்கஷ்டங்களுக்கும் முகம் கொடுக்க வேண்டி ஏற்படுகின்றது .  வாசகர்களே நீங்கள் எவ்வாறோ எனக்குத்தெரியாது ஆனால் ஒன்று சொல்கிறேன் நாம் எப்போதும் நியாயத்தின் பக்கம் தான் இருக்க வேண்டும். ஒரு உண்மையான முஸ்லிம் எப்போதுமே இறைவன் தன்னை  பார்த்துக்கொண்டிருக்கிறான் என்ற நினைவோடுதான் வாழ்வான். எனவே எப்போதும் இறைவனுக்கு பயந்தவனாக நியாயத்தின் பக்கமே அவனது கருத்துக்கள் அமைந்திருக்கும். சமுகத்தில் அதிகமான மக்கள் நியாயத்தின் பக்கம் நிற்க மாட்டார்கள், இப்போது நிச்சயமாக பெரும்பான்மையானவர்களிடம் இருந்து பகைமையே எம்மை வந்தடையும் இப்போது தான் பொறுமையின் அவசியம்  மிக முக்கியமாக தேவைப்படுகின்றது. 

சபை ஒன்றில் அல்லது வீட்டில் என்றாலும் எமக்கு ஒரு சில கருத்துக்கள் தெரிவிக்க வேண்டி நேரிட்டால் இங்குதான் நாம் நம் வார்த்தைகளை அளந்து வெளியிட வேண்டி இருக்கிறன்றது. குறித்த சபைகளில் நமது பார்வையில் மாற்றமான கருத்துக்கள் வெளிவரும் போது உணர்வலைகள் பொங்கிக்கொண்டு வருவது இயல்பு தான் இப்போது உணர்வு வேகத்தை அடக்கிக் கொண்டு, சகித்துக்கொண்டு இருப்பது தான் உண்மையிலேயே திறமையாகும். 

வாய் தவறிவிட்டால் வருத்தம் தான். கொஞ்சம் விலகிச்சென்றால் சிறிது நேரத்தில் நினைத்து சந்தோசமடைய இது வழி வகுக்கும். 

அன்றாட நடவடிக்கைகளின் போது பொறுமை கடைபிடிக்க அல்லாஹு த ஆலா நம் அனைவருக்கும் அருள் புரிவானாக. ஆமீன். 

உங்கள் விமர்சனங்களை எதிர்பார்க்கிறேன். 

வஸ்ஸலாம். 

No comments:

Post a Comment