Saturday, June 19, 2010

Which is the real path?



அஸ்ஸலாமு அலைக்கும் வரகுமதுல்லாஹி வபரகாத்துஹு, 


அன்புள்ள மானிட நெஞ்சங்களே ! 

நீங்கள் தான் உண்மையான அதிஸ்டசாலிகள் 

தயவு செய்து உங்கள் பார்வையை சற்று இப்பக்கத்திற்கு செலவிடுங்கள் 

நீங்கள் வெற்றியாளர் ஆகப்போஹிரீர்கள், யோசிக்கிறீர்களா!.... ( என்ன அந்த வெற்றி என்று ...?.)

நீங்கள் ஈருலக வெற்றியாளர் ஆகப்போகிறீர்கள். இதற்கு என்ன செய்ய வேண்டும் என 

யோசிக்கிறீர்களா? ஆம் பின்வரும் விடயங்களை சற்று நன்றாக சிந்தித்து 

முடிவெடுத்துக்கொள்ளுங்கள் : 

  • நான்  ஏன் படைக்கப்பட்டிருக்கிறேன் , பிறந்து, வளர்ந்து, விரும்பிய விதத்தில்  வாழ்ந்து, மடிந்தால் பிறந்ததற்கான அர்த்தம் சரிதானா? அல்லது ஏதும் முக்கிய எதிர்பார்ப்பை வைத்துத்தான் இறைவன் எம்மை படைத்து இருக்கிறானா ? 
  • ஏன் பல இனங்கள், குலங்கள், மதங்கள், வர்க்க வேறுபாடுகள்?.

  • எம்மதத்தை சார்ந்திருந்தாலும் இறைவன் எம்மை பொருந்திக்கொள்வானா ? 

  • பிறப்பதும் இறப்பதும் ஓர் இயற்கையான செயலாக இருக்கலாம் என நினைக்கிறீர்களா? 

  • மரணத்தின் பின் உலகில் செய்த விடயங்கள் விசாரணை செய்யப்பட்டு அதக்குரிய பெறுபேறு வழங்கப்படும் என நினைக்கிறீர்களா ? 
  • உலக வாழ்க்கையின் பூரணமான வாழ்க்கை திட்டத்தை ஓர் மதம் குறிப்பிட்டு இருக்கிறது அதைப்பற்றி கேள்விப்பட்டு இருக்கிறீர்களா ? 

  • ஓர் உயர் இஸ்தலத்தை அடைய முயற்சியும் சிரமமும் அடைய வேண்டும் என்பதை ஏற்றுக் கொள்கிறீர்களா? 
  • உலகம் இறைவன் மனிதனுக்குக்கொடுத்த ஓர் சோதனைக்களம் என்பதை உங்களால் ஏற்றுக்கொள்ள முடியாதுள்ளத? 

  • பாவங்கள் இலகுவாகவும் நன்மைகள் செய்வது கொஞ்சம் கடினமாகவும் இருப்பதை உணர முடிகிறதா? 

  • நல்ல முறையில் வாழ்ந்த மனிதர்களுக்கு இறைவன் சுவர்க்கத்தையும், பாவம் செய்கின்ற  மனிதர்களுக்கு நரகத்தையும் வழங்குவன் என்று இறைவனே கூறுகிறானே இது சரி தானே! ? 

  • நரக வேதனயை எம்மால் தாங்கிக்கொள்ள முடியாது என்கிறானே இதை உங்கள் மனம் ஏற்கிறதா , ஆம் உலகம் அண்டசராசரம் அனைத்தையும் படைத்த அந்த இறைவனின் வேதனயை எம்மால் தாங்கவே முடியாது தான் என்று எமது உடலில் சிறு கீறல் வந்த போது அந்த வேதனை கூட எம்மால் தாங்க முடியாதே அதனால் இதை ஏற்றுக்கொள்கின்றோம். என்று நீங்கள் நினைக்கிறீர்கள் தானே? 




 ஆம் அன்பர்களே ! ஏன் நாம் நமது வாழ்க்கை சிறப்பாக அமைத்துக்கொள்ள முடியாது ?

இது நமது பலகீனம் அல்லவா?  ஆம் இதற்கு என்ன பரிகாரம் என யோசிக்கிறீர்களா..? 

பரிகாரம் உண்டு நண்பர்களே ! 

நீங்கள் இஸ்லாம் மார்க்கத்தை கற்று அறிந்த நல் அறிஞ்சர்களிடம் தெளிவாக கேட்டு விளங்கிக்கொள்ளுங்கள்.  

நிச்சயம் நீங்கள் வெற்றியாளர்கள் ஆகலாம். இது நிச்சயம் சத்தியம். 

இந்த வெப் பக்கத்தோடு தொடர்ந்து இருங்கள். இன்னும் பல சிறந்த சிந்தனைக்கு விருந்துகளை இன்ஷா அலலாஹ் எதிர் வரும் காலங்களில் தர இருக்கிறேன்.

வஸ்ஸலாமு அலைக்கும்.  

No comments:

Post a Comment