Thursday, April 28, 2011

ஊருக்கு மட்டும் தான் உபதேசம் எனக்கல்ல

ஊருக்கு மட்டும் தான்  உபதேசம் எனக்கல்ல 
இது இஸ்லாத்தில் எந்த அளவு பாரதூரமானது பாருங்கள் ! 

நபி صلاله عليهوسلم அவர்களின் அமுத வாக்கு இவ்வாறு கூறுகிறது 

உங்களிடம் இல்லாத நற்பண்புகளை பிறரிட்கு ஏவாதீர்கள்.

புனிதமிகு அல் குரான் இவ்வாறு கூறுகிறது : 

سورة البقرة
أَتَأْمُرُونَ النَّاسَ بِالْبِرِّ وَتَنسَوْنَ أَنفُسَكُمْ وَأَنتُمْ تَتْلُونَ الْكِتَابَ ۚأَفَلَا تَعْقِلُونَ ﴿٤٤﴾
நீங்கள் வேதத்தையும் ஓதிக் கொண்டே, (மற்ற) மனிதர்களை நன்மை செய்யுமாறு ஏவி, தங்களையே மறந்து விடுகிறீர்களா? நீங்கள் சிந்தித்துப் புரிந்து கொள்ள வேண்டாமா? (2:44)

Will you enjoin good deeds on the others and forget your own selves? You also read the Scriptures, why do you then not understand?

Wednesday, April 27, 2011

இஸ்லாமிய உணர்வு


இஸ்லாமிய உணர்வுகளற்ற 
காரில் செல்கின்ற....
கம்பனி உரிமையாளரை விட
இஸ்லாமிய உணர்வுள்ள 
சைக்கிளில் செல்கின்ற..
வடை வியாபாரி அல்லாஹ்விடத்தில்
மேலானவர்...

Face book

வீட்டிலே facebook உடன் 
உணர்வுகளெல்லாம் பகிர்ந்தால் 
ரோட்டிலே face cover உடன் 
உணர்வுகளை அடக்கித்தான் 
என்ன பயன்...!!!! 

Monday, April 11, 2011

France இல் ஹிஜாப் இற்கு எதிரான சட்டம் அமுலுக்கு வந்து, அதற்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்த 2 பெண்கள் 2011.04.11.அன்று கைது செய்யப்பட்டனர். 2004 ஆம் ஆண்டு காலப்பகுதியில் அன்று சர்ச்சைக்கு உரிய விடயமாக இருந்த போது என் மனதில் அன்று ஏற்பட்ட ஆதங்கம். 

அசத்தியம் அழியும். 

அறநெறி செல்வோரெல்லாம் 
அழகு முழு ஆடை அணிவதை 
அயோக்கிய பிரஞ்சுத்தலைவன் அறியவில்லையா.?
அராபிய முறையில் முக்காடனியும்
அப்பாவி முஸ்லிம் பெண்களை - ஏன் 
அனுமதி மறுக்கிறான் அவன்..???
அஞ்ஞானம் விரும்புவதால்..
மெய்ஞானம் மறுக்கிறான..??
அல்லாஹ்வின் கட்டளை மறுத்தோரின் முடிவை 
அதிவிரைவில் உணர்வான் இன்ஷா அல்லாஹ்!!